தூயசக்தித் தொழில்நுட்பம் தொடர்பான போட்டிகள்

இலங்கைக்கான நோர்வேத்தூதரகத்தின் அனுசரணையுடன் யாழ்ப்பாண விஞ்ஞானச்சங்கம் யாழ் மாவட்டப் பாடசாலை மாணவர்களுக்கிடையே நடாத்தும் தூயசக்தித் தொழில்நுட்பம் தொடர்பான போட்டிகள்

மேற்படி போட்டிக்கான ஆக்கங்கள் “தூய சக்தித் தொழில்நுட்பங்கள்” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு அமையவேண்டும். ஆக்கங்கள் குழு ஆக்கங்களாக இருக்க வேண்டும், ஒரு குழுவில் குறைந்தது இருவராவது அங்கத்துவம் வகிக்க வேண்டும்.

  • சுவரொட்டி(Poster) வரைதாளின் அளவு A1 (Bristol Board size)
  • ஆவணப்படம் (Documentary) – நேரம் : 3 – 5 நிமிடங்கள் சமர்ப்பிக்கும் முறை : இறுவட்டுப்பதி
  • புத்தாக்கக் கண்காட்சிப்பொருள் (Innovative exhibit) கண்காட்சிப் பொருளின் புகைப்படம் மற்றும் அதன் தொழிற்பாட்டுக்குரிய விளக்கக் குறிப்பு அல்லது அப்பொருளின் தொழிற்பாட்டை விளக்கும் காணொளிப்பதிவு (குறிப்பு : கண்காட்சிப் பொருளை மதிப்பீட்டின் பொழுது சமர்ப்பிக்கலாம்) 

ஆக்கங்கள் சமர்ப்பிக்கப்படவேண்டிய இறுதித்திகதி – 15 ஏப்பிரல் 2018

ஆக்கங்கள் சமர்ப்பிக்கப்படவேண்டிய முகவரி

யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கம்,

இல, 84, கல்லூரி வீதி, நீராவியடி. (இலங்கை வேந்தன் கலைக்கல்லூரிக்கு முன்பாக)

இப் போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு சான்றிதழ்களும் முதல் மூன்று இடங்களைப் பெறும் வெற்றியாளர்களுக்கு சூரியப்படல்களும் பரிசாக வழங்கப்படும்.

மேலதிக விபரங்களுக்கு:

0212215645

https://www.thejsa.org , thejsaorg.office@gmail.com

https://project.jfn.ac.lk/hrncet