விஞ்ஞான வினாவிடைப் போட்டி (Science Quiz Competition)
விஞ்ஞான வினாவிடை போட்டியின் 1 ம்கட்ட எழுத்து மூலமான போட்டி பரீட்சை 09.03.2018 அன்று வடமாகாணத்திலுள்ள 3 நிலையங்களில் நடைபெற்றது.
பரீட்சைநிலையங்கள்
- யா/யாழ் இந்து மகளிர் கல்லூரி
- மு/மாங்குளம் மகா வித்தியாலயம்
- மன்/சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி
விஞ்ஞான வினாவிடை இறுதிப்போட்டிக்கு தேர்வான 12 பாடசாலைகளுக்கான போட்டி (வாய்மொழிமூலமானது) 20.03.2018 அன்று யாழ் மத்திய கல்லூரில் இடம்பெற்றது.
விஞ்ஞானப்பேச்சுப்போட்டி (Science Oratory Competition)
யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கமானது இம்முறை முதன்முறையாக ஆங்கிலமொழி மூலமான பேச்சுப்போட்டியை நடாத்தியுள்ளது. இப் போட்டியானது 08.03.2018 அன்று யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.
முதலாம் கட்ட தமிழ்மொழி மூலமான விஞ்ஞானப் பேச்சுப் போட்டியானது 3 நிலையங்களில் நடைபெற்றது
08.03.2018 – யாழ் பல்கலைக்கழகம்
12.03.2018 – மு/மாங்குளம் மகா வித்தியாலயம்
மன்/சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி
விஞ்ஞானப் பேச்சுப் போட்டி இறுதிப்போட்டிக்கு தேர்வான 9 மாணவர்களுக்கான போட்டி 20.03.2018 அன்று யாழ் மத்திய கல்லூரில் இடம்பெற்றது.
இயற்கைக் குறிப்பேட்டுப் போட்டி (Nature Diary Contest)
யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கமானது இம்முறை முதன்முறையாக இயற்கைக் குறிப்பேட்டுப் போட்டியை நடாத்தியுள்ளது. இப் போட்டிக்கு 34 இயற்கைக் குறிப்பேடுகள் கிடைக்கப்பெற்றன.
விஞ்ஞான கண்காட்சிப் போட்டி மற்றும் சுவரொட்டிபோட்டி (Science Exhibition & Poster Competition)
விஞ்ஞான கண்காட்சிப்போட்டி மற்றும் சுவரொட்டிபோட்டியானது இம்முறை 3 பிரிவுகளில் இடம்பெற்றது.
- Advanced Level (Grade 12-13)
- Senior Secondary (Grade 9-11)
- Junior Secondary(Grade 6-8)
இப் போட்டிகளானது வடமாகாணத்திலுள்ள 3 போட்டிநிலையங்களில் நடைபெற்றது.
10.03.2018 அன்று யா/யாழ் இந்து மகளிர் கல்லூரி போட்டிகள் நடைபெற்றன.
12.03.2018 அன்று மன்னார் சித்திவிநாயகர் கல்லூரியிலும் மாங்குளம் மகா வித்தியால த்திலும் போட்டிகள் நடைபெற்றன.
16.03.2018 அன்று யாழ் புனித பரியோவான் கல்லூரியில் நடைபெற்றது.