School Science Program

School Science Program - 2015/2016

1991 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கம் வடமாகாணத்தில் விஞ்ஞான அறிவையும் திறன்களையும் விருத்தி செய்யும்விதமாகப் பல செயற்றிட்டங்களை முன்னெடுத்துவருவது நீங்கள் அறிந்ததே. அவ்வகையில் வருடாவருடம் பாடசாலைகளுக்கிடையிலும் பாடசாலை மாணவர்களுக்கிடையிலும் பல்வேறு வகையான போட்டிகள் நடாத்தப்பட்டு வருகின்றன.

இவ்வருடமும் அப்போட்டிகள் ஒழுங்கு செய்யப்பட்டிக்கின்றன. கடந்த வருடங்களில் பெரும்பாலான போட்டிகள் யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டே இடம்பெற்றன. இவ்வருடம், வடமாகாணத்தின் அனைத்து கல்வி வலயங்களையும் கருத்திற்கொண்டு போட்டிகள் யாழ்ப்பாணம், மாங்குளம், வவுனியா, மன்னார் எனப் பல இடங்களிலும் நடாத்தப்பட இருக்கின்றன.

கண்காட்சி, சுவரொட்டி, கட்டுரை, பேச்சு, வினாவிடை, பாடசாலைத் தோட்டம் ஆகிய போட்டிகள் இம்முறை நடாத்தப்படஇருக்கின்றன. இப்போட்டிகள் பற்றி விரிவான விபரங்கள், மதிப்பீட்டு முறைகள், நடாத்தப்பட இருக்கும் திகதிகள் உள்ளடங்கிய ஒரு விபரக்கோவை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இப்போட்டிகள் பற்றிய மேலதிக விபரங்களை www.thejsa.org என்ற இணையத்தளத்திலும் பார்வையிடலாம். அத்தோடு ஒவ்வொரு போட்டிக்குமுரிய பொறுப்பானவர்களுடன் மின்னஞ்சலூடாகத் தொடர்ப்பு கொள்ளலாம்.

இந்தமுறை கண்காட்சி மற்றும் சுவரொட்டிப் போட்டிகளில் சிறப்பாகச் செயற்படும் அனைத்து மாணவர்களது காட்சிப்பொருள்களும் சுவரொட்டிகளும் பெப்ரவரி 18,19,20இல் இடம்பெறும் மருத்துவ பீடத்தின் கண்காட்சியில் காட்சிப்படுத்த ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. அத்தோடு பேச்சு, கட்டுரைப் போட்டியில் வெற்றிபெறும் மாணவர்கள் யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கத்தின் வருடாந்த மாநாட்டில் அவற்றை ஏனையோருக்கு படைப்பதற்கு நேரம் ஒதுக்கப்படும். வினாடி வினாப் போட்டிகளை தொலைக்காட்சியில் நேரடியாகக் காட்டுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனவே இம்முறை இப்போட்டிகள் மாணவர்ளின் திறமைகளை வெளிக்கொணர உதவுவதுடன் அவர்களுக்கான ஒரு உந்துதலையும் வழங்கும் என்பதில் ஐயமில்லை. வலய மட்டத்தில் சிறப்பாகச் செயற்படும் மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்குவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆகவே குறிப்பிட்ட தினங்களில் உரிய ஆயத்தங்களுடன் மாணவர்களைப் போட்டிகளில் பங்குபற்ற வைப்பதற்கு ஆவனசெய்யுமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறோம். இத்துடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவங்களை நிரப்பி 31.01.2016 திகதிக்கு முன்னர் தவறாது அனுப்பி வையுங்கள். அத்தோடு மாணவர்கள் இப்போதே போட்டிக்குத் தயாராகத் தொடங்கலாம். விண்ணப்பிக்கும் அனைவருக்குமான போட்டி ஒழுங்குகள் குறித்த இடங்களில் செய்துதரப்படும்.

விஞ்ஞான வினாவிடைப்போட்டி

பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்படும் இப்போட்டியானது மாணவர்களின் அறிவுத்திறன், விஞ்ஞான ரீதியான சிந்தனைத் திறன், வாசிக்கும் ஆற்றல், தேடிக்கற்கும் திறன் போன்றவற்றை விருத்தி செய்யும் நோக்குடன் நடாத்தப்படுகின்றது. இப்போட்டியானது இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டமாக பொது அறிவு எழுத்துப்பரீட்சையும், இரண்டாம் கட்டமாக வாய்மூல வினாவிடைப் போட்டியும் நடைபெறும்.

முதல் கட்டமாக நடைபெறும் பொது அறிவு எழூத்துப் பரீட்சையானது வடமாகாணத்தில் 5 பரீட்சை நிலையங்களில் ஒரேநேரத்தில் நடைபெறும்.

  • மாங்குளம் மத்திய மகாவித்தியாலயம்: கிளிநொச்சி, முல்லைதீவு, துணுக்காய் கல்வி வலயங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கானது.
  • சைவப்பிரகாச மகளிர் கல்லூரி, வவுனியா: வவுனியா வடக்கு, வவுனியா கிழக்கு கல்வி வலயங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கானது.
  • மன்னார் சித்தி விநாயகர் இந்துக் கல்லூரி: மன்னார், மடு கல்வி வலயங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கானது.
  • இந்து மகளிர் கல்லூரி: யாழ்ப்பாணம், தீவகம், வடமராட்சி, தென்மராட்சி கல்வி வலயங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கானது.
  • இராமநாதன் கல்லூரி, மருதனார் மடம்: வலிகாம கல்வி வலய மாணவர்களுக்கானது.

இரண்டாம் கட்டமாக நடைபெறும் வினாவிடைப் போட்டியானது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெறும்.

போட்டியில் பங்குபற்றத் தகுதியானோர்: இப்போட்டியில் க.பொ.த. சாதாரணதர, உயர்தர மாணவர்கள் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர். வடமாகாணத்திலுள்ள க.பொ.த.சாதாரண, உயர்தரவகுப்புக்களைக் கொண்ட பாடசாலைகள் ஒவ்வொன்றிலிருந்தும் பாடசாலையினால் தெரிவுசெய்யப்பட்ட 5 மாணவர்கள் எழுத்து மூலமான பொதுஅறிவுப் போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

மதிப்பீடு: ஓவ்வொரு பாடசாலையிலிருந்தும் பங்குபற்றிய ஐந்து போட்டியாளர்கள் பெற்றமொத்தப் புள்ளிகளின் அடிப்படையில் 12 பாடசாலைகள் தெரிவுசெய்யப்பட்டு வாய்மூலமான வினாவிடைப்போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படும்.

பரிசில்களும் சான்றிதழ்களும்: முதலாம்,இரண்டாம்,மூன்றாம் நிலைகளைப் பெற்ற பாடசாலை மாணவர்கள் அனைவருக்கும் வாய்மூலமான வினாவிடைப்போட்டியில் வெற்றிபெற்றமைக்கான சான்றிதழ்கள் வழங்குவதுடன், முதலாம், இரண்டாம் நிலைமைகளைப் பெற்ற பாடசாலைகளுக்குப் பரிசில்களும் வழங்கப்படும். இவை தவிர எழுத்து மூலமான பொது அறிவுப் போட்டியில் அதிகூடிய புள்ளிகளைப்பெறும் முதல் 10 மாணவர்கள் திறமை அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டு, அவர்களுக்கு எழுத்து மூலமான பொது அறிவுப் போட்டியில் வெற்றி பெற்றமைக்கான சான்றிதழ்கள் /பரிசுகள் வழங்கப்படும்.

மதிப்பீடு இடம்பெறும் திகதிகள்:

  • முதல்கட்ட எழுத்துப் பரீட்சை நடைபெறும் நேரம் – திகதி: 27.02.2016 திகதி,  காலை 9:00 – 11:00
  • முதற்கட்டத்தில் தேறிய மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட வாய்மூல வினாவிடைப் போட்டி நடைபெறும் திகதி – 05.03.2016

இப்போட்டிக்கு விண்ணப்பிக்க விரும்பும் பாடசாலைகள், இத்துடன் இணைக்கப்பட்டுள்ள உரிய படிவத்தினை நிரப்பி 30.01.2015 இற்கு முன்னர் விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பிவைக்கவேண்டும்.

இப்போட்டி சம்பந்தமான சந்தேகங்களுக்கும் மேலதிக விபரங்களுக்கும் பின்வரும் முகவரிகளூடு தொடர்புகொள்ளலாம்.

Mrs. Thevaki John Gnanakarunyan, Chairperson Section C, JSA
Senior Lecturer,
Unit of Allied Health Sciences,
Faculty of Medicine,
University of Jaffna.
thevaki_iyampillai@yahoo.com

சுவரொட்டிக்கான போட்டி

மாணவர்களின் சிந்தனைத் திறன், புத்தாக்கத்திறன், காட்சித் திறன், சித்திர அறிவு போன்ற பல அறிவு/திறன்களை விருத்திசெய்யும் முகமாக இப்போட்டி ஒழுங்கு செய்யப்படுகிறது. இப்போட்டிக்கான சுவரொட்டிகள் கழிவு முகாமைத்துவம் என்ற தொனிப்பொருளுக்கமைய ஆக்கப்படவேண்டும்.

போட்டியில் பங்குபற்றத் தகுதியானோர்: க.பொ.த. சாதாரண தரம், உயர்தர மாணவர்கள் பங்குபெறலாம்.

போட்டி பற்றிய விபரங்கள்:

  • சுவரொட்டிப் போட்டியில் பங்குபற்றும் மாணர்கள் போட்டி நடைபெறும் இடத்திலேயே தாம் கொண்டு வரும் Bristol board மற்றும் ஏனைய பொருட்களைக் கொண்டு சுவரொட்டியை உருவாக்கவேண்டும்.
  • போட்டியில் தனிநபர்களாக மட்டும் பங்குபற்றலாம்.
  • சுவரொட்டி தயாரிப்பதற்கு 1 மணித்தியாலம் 30 நிமிடங்கள் வழங்கப்படும்.
  • சுவரொட்டியானது “கழிவு முகாமைத்துவம்” என்ற தொனிப்பொருளைக்கொண்டு உருவாக்கப்படவேண்டும்.
  • போட்டிக்கான செலவுகளை யாழ். விஞ்ஞானச் சங்கம் பொறுப்பேற்காது.

மதிப்பீடு:  சுவரொட்டிகள் பின்வரும் தொனிப்பொருளைக் காட்டுதல், படைப்பாற்றல், கவர்ச்சி, விளக்கம், எளிமை உட்பட பல்வேறு வகையில் துறைசார் வல்லுனர்களால் மதிப்பீடு செய்யப்படும். இதில்  மதிப்பீட்டாளர்களின் தீர்ப்பே இறுதியானது.

முதற்கட்ட மதிப்பீட்டில் தேறும் அனைத்து சுவரொட்டிகளும் யாழ். பல்கலைக்கழக மருத்துவத்துறையில் பெப்ரவரி 18,19,20 ஆம் திகதிகளில் இடம்பெறும் மருத்துவக் கண்காட்சியில் காட்சிப்படுத்த அனுமதிக்கப்படும். இதில் வடமாகாணத்தில் உள்ள அனைத்து கல்வி வலயங்களில் இருந்தும் தேறும் மாணவர்கள் சுவரொட்டிகளுடன் பங்கேற்பர். இங்கே இறுதி மதிப்பீடும் இடம்பெறும்.

சான்றிதழ்கள்: வடமாகாண மட்டத்தில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடத்தினைப் பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் / பரிசில்கள் வழங்கப்படும். அத்தோடு வலயமட்டங்களில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெறும் மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

மதிப்பீடு இடம்பெறும் திகதிகள்:

  • 11.02.2016 அன்று காலை 10 மணிக்கு பின்வரும் நிலையங்களுக்கு மாணவர்கள் சமூகந்தரவேண்டும்.
  • மாங்குளம் மத்திய மகாவித்தியாலம்: கிளிநொச்சி, முல்லைத்தீவு, துணுக்காய் கல்வி வலய மாணவர்கள்
  • மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி: மன்னார், மடு கல்வி வலய மாணவர்கள்
  • சைவப்பிரகாச மகளிர் கல்லூரி, வவுனியா: வவுனியா வடக்கு, வவுனியா கிழக்கு மாணவர்கள்.
  • 12.02.2016 அன்று காலை 10 மணிக்கு யாழ் இந்து மகளிர் கல்லூரியில் யாழ், திவகம், வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி கல்வி வலயங்களைச் சேர்ந்த மாணவர்கள் வருகை தரவேண்டும்.

இப்போட்டிக்கு விண்ணப்பிக்க விரும்பும் பாடசாலைகள், இத்துடன் இணைக்கப்பட்டுள்ள உரிய படிவத்தினை நிரப்பி 30.01.2015 இற்கு முன்னர் விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பிவைக்கவேண்டும்.

இப்போட்டி சம்பந்தமான சந்தேகங்களுக்கும் மேலதிக விபரங்களுக்கும் பின்வரும் முகவரிகளூடு தொடர்புகொள்ளலாம்.

Mrs. K.Niranjan, Chairperson/Section A
Senior Lecturer,
Department of Botany,
Faculty of Science,
University of Jaffna.
knranjan@jfn.ac.lk

கண்காட்சிப் போட்டி

மாணவர்களின் சிந்தனைத் திறன், புத்தாக்கத்திறன், காட்சித் திறன், எண்ணங்களை வெளிப்படுத்தும் திறன், பொருட்களைக் கையாளும் திறன் போன்ற பல அறிவு/திறன்களை விருத்திசெய்யும் முகமாக இப்போட்டி ஒழுங்கு செய்யப்படுகிறது. இப்போட்டிக்கான காட்சிப் பொருள்கள் கழிவு முகாமைத்துவம் என்ற தொனிப்பொருளுக்கமைய ஆக்கப்படவேண்டும்.

போட்டியில் பங்குபற்றத் தகுதியானோர்: க.பொ.த. சாதாரண தரம், உயர்தர மாணவர்கள் பங்குபெறலாம்.

போட்டி பற்றிய விபரங்கள்:

  • ஒரு பாடசாலை எத்தனை காட்சிப் பொருட்களையும் காட்சிப்படுத்தலாம். ஒரு காட்சிப்பொருளை தனியாகவோ அல்லது ஆகக் கூடியது மூன்று மாணவர்கள் கொண்ட குழுக்களாகவோ உருவாக்கலாம்.
  • காட்சிப்பொருள்கள் மாணவர்களினாலேயே செய்யப்படவேண்டும்.
  • சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள், சக்தியின் உச்சப் பயன்பாடு, கழிவுப்பொருள்கள் மீள்சுழற்சி என்பன கவனத்திற்கொள்ளப்படவேண்டும். இயலுமானவரை குறைந்த செலவில் செய்யப்படவேண்டும்.
  • இலகுவில் இடம்மாற்றக்ககூடியதாக – காவிச் செல்லக்கூடியதாக – இருக்கவேண்டும்.
  • கண்காட்சியில் காட்சிப்பொருள் தொடர்பாக கேட்கப்படும் விஞ்ஞான ரீதியான கேள்விகளுக்கு மாணவர்கள் பதிலளிக்கக் கூடியதாக இருக்கவேண்டும்.
  • காட்சிப் பொருட்கள் ஏலவே உருவாக்கப்பட்ட குறிப்பிட்ட தினத்தில், குறித்த நேரத்தில், குறித்த இடத்தில் காட்சிப்படுத்தப்படவேண்டும்.
  • போட்டிக்கான செலவுகளை யாழ். விஞ்ஞானச் சங்கம் பொறுப்பேற்காது.

மதிப்பீடு:  காட்சிப்பொருள்கள் கழிவு முகாமைத்துவம் என்ற தொனிப்பொருளை வெளிக்காட்டும் விதம், படைப்பாற்றல், தெளிவு, எளிமை, வளங்களின் உச்சப்பயன்பாடு, காட்சிக்கான விளக்கங்கள் உட்பட பல்வேறு வகையில் துறைசார் வல்லுனர்களால் மதிப்பீடு செய்யப்படும். இதில்  மதிப்பீட்டாளர்களின் தீர்ப்பே இறுதியானது.

முதற்கட்ட மதிப்பீட்டில் தேறும் அனைத்து காட்சிப் பொருட்களும் யாழ். பல்கலைக்கழக மருத்துவத்துறையில் பெப்ரவரி 18,19,20 ஆம் திகதிகளில் இடம்பெறும் மருத்துவக் கண்காட்சியில் காட்சிப்படுத்த அனுமதிக்கப்படும். இதில் வடமாகாணத்தில் உள்ள அனைத்து கல்வி வலயங்களில் இருந்தும் தேறும் மாணவர்கள் காட்சிப் பொருட்களும் காட்சிப்படுத்தப்படும். இங்கே இறுதி மதிப்பீடும் இடம்பெறும்.

சான்றிதழ்கள்: வடமாகாண மட்டத்தில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடத்தினைப் பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் / பரிசில்கள் வழங்கப்படும். அத்தோடு வலயமட்டங்களில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெறும் மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

மதிப்பீடு இடம்பெறும் திகதிகள்:

  • 11.02.2016 அன்று காலை 10 மணிக்கு பின்வரும் நிலையங்களுக்கு மாணவர்கள் காட்சிவ் பொருள்களுடன் சமூகந்தரவேண்டும்.
  • மாங்குளம் மத்திய மகாவித்தியாலம்: கிளிநொச்சி, முல்லைத்தீவு, துணுக்காய் கல்வி வலய மாணவர்கள்
  • மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி: மன்னார், மடு கல்வி வலய மாணவர்கள்
  • சைவப்பிரகாச மகளிர் கல்லூரி, வவுனியா: வவுனியா வடக்கு, வவுனியா கிழக்கு மாணவர்கள்.
  • 12.02.2016 அன்று காலை 10 மணிக்கு யாழ் இந்து மகளிர் கல்லூரியில் யாழ், திவகம், வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி கல்வி வலயங்களைச் சேர்ந்த மாணவர்கள் வருகை தரவேண்டும்.

இப்போட்டிக்கு விண்ணப்பிக்க விரும்பும் பாடசாலைகள், இத்துடன் இணைக்கப்பட்டுள்ள உரிய படிவத்தினை நிரப்பி 30.01.2015 இற்கு முன்னர் விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பிவைக்கவேண்டும்.

இப்போட்டி சம்பந்தமான சந்தேகங்களுக்கும் மேலதிக விபரங்களுக்கும் பின்வரும் முகவரிகளூடு தொடர்புகொள்ளலாம்.

Mrs. K.Niranjan, Chairperson/Section A
Senior Lecturer,
Department of Botany,
Faculty of Science,
University of Jaffna.
knranjan@jfn.ac.lk

பேச்சுப் போட்டி

போட்டியில் பங்குபற்றத் தகுதியானோர்:   இப்போட்டியில் க.பொ.த. சாதாரணதர, உயர்தர மாணவர்கள் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர். வடமாகாணத்திலுள்ள க.பொ.த. சாதாரண, உயர்தரவகுப்புக்களைக் கொண்ட பாடசாலைகள் ஒவ்வொன்றிலிருந்தும் பாடசாலையினால் தெரிவுசெய்யப்பட்ட 4 மாணவர்கள்  கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். கலவன் பாடசாலையாக இருப்பின் பாலின அடிப்படையில் சமத்துவம் வழங்கப்படுதல் வேண்டும்.

போட்டி நடைமுறை:

  • பேச்சுப் போட்டிக்குரிய விடயப்பரப்பு பின்வருவனவற்றில் ஒன்றாக இருக்கலாம்.
  • சூழலுடன் இணைந்த பயிர்ச்செய்கையும் உடல் ஆரோக்கியமும்
  • வீட்டு கழிவுகளின் மீள் சுழற்சியும் அவற்றின் பயன்பாடும்
  • கழிவு முகாமைத்துவமும் உயிர் பல்வகைமையைப் பாதுகாத்தலும்
  • இலத்திரனியற் கழிவுகளும் அவற்றின்பின்னணியிலுள்ள பொருளாதாரமும்
  • பிரிந்தழிய முடியாத கழிவுகளின் முகாமைத்துவம்
  • பசுமைப் புரட்சியும் சூழல் பாதுகாப்பும்
  • போட்டியின் நடுவர்களால் போட்டி நடைபெறும் நிலையத்தில் போட்டி நடைபெறுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாக மேற்குறிப்பிட்ட விடயப்பரப்புகளுக்கமைவாக ஒரு தலைப்பு வழங்கப்படும்.
  • வழங்கப்பட்ட தலைப்பு தொடர்பான விடயங்களைத் தேடுவதற்காக மாணவர்களுக்கு கணினி மற்றும் இணைய வசதிகள் 30 நிமிடத்திற்கு வழங்கப்படும்.

மதிப்பீடு:

  • ஒவ்வொருவருக்கும் 5 நிமிடங்கள் வழங்கப்படும்.
  • போட்டியாளர்களுக்கான புள்ளிகள் பின்வரும் நான்கு பகுதிகளுக்கமைய வழங்கப்படும்.
  • பேச்சினுடைய உள்ளடக்கம் : பேசப்படும் விடயத்தின் உண்மைத் தன்மை, நம்பிக்கைத் தன்மை, பேச்சிற்கான சரியான அறிமுகம், வெற்றிகரமானதும், பொருத்தமானதுமான முடிவினை முன்வைக்கக்கூடிய கருப்பொருளின் தர்க்கரீதியான வளர்ச்சி, எண்கணிய அடிப்படையிலான சரியான தரவுகள், பேச்சின் புன்னகை, அழகான அர்த்தமுள்ள சொற்களினை தெரிவுசெய்தல், அவற்றினை சரியான விதத்தில் விபரணம் செய்தல்
  • பேச்சினை வெளிப்படுத்தும் முறையும் உடலசைவு மொழியும் (Body language): பேச்சாளரின் பேசும் சத்தத்தினுடைய தன்மை, ஒலியின் ஏற்ற இறக்கம், தயக்கம் எதுவும் இன்றியதொடர்ச்சியா பேச்சு, உடலசைவுகள், தன்னம்பிக்கை, உறுதி.
  • பேச்சின் முழுமையான வினைத்திறன் (Overall Effectiveness)
  • பின்வரும் தவறுகளுக்காகப் புள்ளிகள் கழிக்கப்படும்
  • உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட விடயங்களில் இருந்து பேச்சுவிடயம் வேறுபடின் புள்ளிகள் குறைக்கப்படும்.
  • குறித்த 5 நிமிடங்களுக்கு குறைவாகவோ அல்லது கூடுதலாகவோ உள்ள ஒவ்வொரு 15 செக்கனுக்கும் புள்ளிகள் குறைக்கப்படும்
  • பேச்சை சரியான வகையில் முடிக்கத் தவறுதல்

மதிப்பீடு இடம்பெறும் திகதிகள்:

  • நடைபெறும் நேரம் – திகதி: 26.02.2016 திகதி,  காலை 10:00 மணி
  • மதிப்பீடுகள் இடம்பெறும் இடங்கள்:
  • விவசாய பீடம், கிளிநொச்சி வளாகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்: கிளிநொச்சி, துணுக்காய், முல்லைத்தீவு கல்வி வலயங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு.
  • பிரயோக விஞ்ஞான பீடம், வவுனியா வளாகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்: வவுனியா வடக்கு, வவுனியா தெற்கு, மன்னார், மடு கல்வி வலயங்களுக்கானது.
  • கலைப்பீடம், யாழ்ப்பாண வளாகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்: வடமராட்சி, தென்மராட்சி, யாழ்ப்பாணம், தீவகம், வலிகாம வலய மாணவர்களுக்கானது.

இப்போட்டிக்கு விண்ணப்பிக்க விரும்பும் பாடசாலைகள், இத்துடன் இணைக்கப்பட்டுள்ள உரிய படிவத்தினை நிரப்பி 30.01.2015 இற்கு முன்னர் விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பிவைக்கவேண்டும்.

இப்போட்டி சம்பந்தமான சந்தேகங்களுக்கும் மேலதிக விபரங்களுக்கும் பின்வரும் முகவரிகளூடு தொடர்புகொள்ளலாம்.

Mr. N. Sivakaran, Chairperson Section D, JSA
Lecturer,
Department of Philosophy,
Faculty of Arts,
University of Jaffna.
sivakaran18@yahoo.com, 0773145678

கட்டுரைப் போட்டி

போட்டியில் பங்குபற்றத் தகுதியானோர்:   இப்போட்டியில் க.பொ.த. சாதாரணதர, உயர்தர மாணவர்கள் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர். வடமாகாணத்திலுள்ள க.பொ.த. சாதாரண, உயர்தரவகுப்புக்களைக் கொண்ட பாடசாலைகள் ஒவ்வொன்றிலிருந்தும் பாடசாலையினால் தெரிவுசெய்யப்பட்ட 4 மாணவர்கள்  கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். கலவன் பாடசாலையாக இருப்பின் பாலின அடிப்படையில் சமத்துவம் வழங்கப்படுதல் வேண்டும்.

போட்டி நடைமுறை:

  • கட்டுரைப்போட்டிக்குரிய விடயப்பரப்பு பின்வருவனவற்றில் ஒன்றாக இருக்கலாம்.
  • சூழலுடன் இணைந்த பயிர்ச்செய்கையும் உடல் ஆரோக்கியமும்
  • வீட்டு கழிவுகளின் மீள் சுழற்சியும் அவற்றின் பயன்பாடும்
  • கழிவு முகாமைத்துவமும் உயிர் பல்வகைமையைப் பாதுகாத்தலும்
  • இலத்திரனியற் கழிவுகளும் அவற்றின்பின்னணியிலுள்ள பொருளாதாரமும்
  • பிரிந்தழிய முடியாத கழிவுகளின் முகாமைத்துவம்
  • பசுமைப் புரட்சியும் சூழல் பாதுகாப்பும்
  • கட்டுரைப் போட்டுக்குரிய 3 தலைப்புகள், போட்டி நிலையத்தில் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் தரப்படும். அவற்றில் ஒன்றினைத் தெரிவு செய்து கட்டுரை வரையலாம்.
  • கட்டுரை, தமிழ் மொழியில் 1000 சொற்களுக்கு மேற்படாதும் 600 சொற்களுக்குக் குறையாமலும் உருவாக்கப்படவேண்டும்.

மதிப்பீடு இடம்பெறும் இடங்கள்:

  • மாங்குளம் மத்திய மகாவித்தியாலயம்: கிளிநொச்சி, முல்லைதீவு, துணுக்காய் கல்வி வலயங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கானது.
  • சைவப்பிரகாச மகளிர் கல்லூரி, வவுனியா: வவுனியா வடக்கு, வவுனியா கிழக்கு கல்வி வலயங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கானது.
  • மன்னார் சித்தி விநாயகர் இந்துக் கல்லூரி: மன்னார், மடு கல்வி வலயங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கானது.
  • இந்து மகளிர் கல்லூரி: யாழ்ப்பாணம், தீவகம், வடமராட்சி, தென்மராட்சி கல்வி வலயங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கானது.
  • இராமநாதன் கல்லூரி, மருதனார் மடம்: வலிகாம கல்வி வலய மாணவர்களுக்கானது.

மதிப்பீடு இடம்பெறும் திகதி:  27.02.2016 திகதி,  காலை 11:00 – 13:00

பரிசில்களும் சான்றிதழ்களும்: வடமாகாண மட்டத்தில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடத்தினைப் பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் / பரிசில்கள் வழங்கப்படும். அத்தோடு வலயமட்டங்களில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெறும் மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

இப்போட்டிக்கு விண்ணப்பிக்க விரும்பும் பாடசாலைகள், இத்துடன் இணைக்கப்பட்டுள்ள உரிய படிவத்தினை நிரப்பி 30.01.2015 இற்கு முன்னர் விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பிவைக்கவேண்டும்.

இப்போட்டி சம்பந்தமான சந்தேகங்களுக்கும் மேலதிக விபரங்களுக்கும் பின்வரும் முகவரிகளூடு தொடர்புகொள்ளலாம்.

Mr. N. Sivakaran, Chairperson Section D, JSA
Lecturer,
Department of Philosophy,
Faculty of Arts,
University of Jaffna.
sivakaran18@yahoo.com, 0773145678

பாடசாலை தோட்டப்போட்டி

இயற்கை விவசாயம் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்காத பயிர்ச்செய்கை முறைகளை கொண்ட பாடசாலை தோட்டங்களை உருவாக்குவதற்கும் அவற்றினை பராமரிப்பதற்குமான மாணவர்களின் ஆர்வத்தினை ஊக்குவிக்குமுகமாகவும் இப்போட்டி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

போட்டியில் பங்குபற்ற தகுதியானோர்: வடமாகாணத்தில் உள்ள அனைத்து வலயங்களை சேர்ந்த பாடசாலைகளும் இப்போட்டியில் பங்குபற்றலாம்.

மதிப்பீடு:

  • பாடசாலை தோட்டங்களை மதிப்பீடு செய்வதற்கு வருகை தரும் துறைசார் வல்லுனர்களால் மதிப்பீடுகள் செய்யப்படும். மதிப்பீட்டாளர்களின் தீர்ப்பே இறுதியானது.
  • தோட்டங்களை மதிப்பீடு செய்யும் போது பின்வரும் விடயங்கள் கருத்தில் கொள்ளப்படும்.

தோட்டத்தின் பரப்பளவு (ஆகக்குறைந்தது  10×20 m2விஸ்திரணம் இருக்க வேண்டும்), தோட்டத்தில் உளள் பயிர்கள் / தாவர வகைகளின் எண்ணிக்கை, மூலிகை தாவர வகைகளின் எண்ணிக்கை, அவரை மற்றும் கிழங்கு பயிர்வகைகளின் எண்ணிக்கை, நாளாந்த தேவைகளுக்கு  பயன்படும் பயிர் வகைகளின் எண்ணிக்கை. (இலைக்கறி பயிர்கள்), பழமரங்களின் எண்ணிக்கை, அலங்கார தாவர வகைகளின் எண்ணிக்கை, தாவரங்களுக்கு பெயர் பலகை இட்டிருத்தல். (தாவரபெயர், குடும்ப பெயர், பொதுப்பெயர்), சேதன முறையிலான தாவர பராமரிப்பு, கழிவுகளை மீள் சுழற்சி செய்தல், கூட்டெரு தயாரித்தல், பொதிப்பயிர் செய்கை, சிறப்பான பயிர்செய்கை முறைகள், பயிர்செய்கையில் மாணவர்களின் பங்களிப்பு

மதிப்பீடு இடம்பெறும் காலம்:

  • மார்ச் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் (01.03.2016 – 15.03.2016) எமது மதிப்பீட்டுக்குழு போட்டியில் பங்குபற்றும். பாடசாலைகளுக்கு நேரடியாக வருகை தந்து மதிப்பீட்டிகை மேற்கொள்ளும்.

பரிசில்களும் சான்றிதழ்களும்:

  • வடமாகாண மட்டத்தில் முதல் மூன்று இடங்களை பெறும் பாடசாலைகளுக்கு பரிசில்கள் வழங்கப்படும். வலய மட்டத்தில் முதலிடம் பெறும் பாடசாலைகளுக்கும் சிறப்பு பரிசில்கள் வழங்கப்படும்.

இப்போட்டிக்கு விண்ணப்பிக்க விரும்பும் பாடசாலைகள், இத்துடன் இணைக்கப்பட்டுள்ள உரிய படிவத்தினை நிரப்பி 30.01.2015 இற்கு முன்னர் விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பிவைக்கவேண்டும்.

இப்போட்டி சம்பந்தமான சந்தேகங்களுக்கும் மேலதிக விபரங்களுக்கும் பின்வரும் முகவரிகளூடு தொடர்புகொள்ளலாம்.

Dr.S.Vasantharuba,Chairperson/Section B
Senior Lecturer,Faculty of Agriculture,
University of Jaffna,
Ariviyal Nagar, Kilinochchi.
vasantharuba@gmail.com, 0771249032.

மாதிரி விண்ணப்ப படிவங்கள்

[wpdm_package id=’160′]

[wpdm_package id=’164′]

[wpdm_package id=’167′]
 
Mobile Application Development (Open Category)

The JSA Scetion B planned to organize a competition titled “Mobile Application Development” among the techies in the Northern Province. This competition is Open to all the interested participants in this region. Competition is open for the participants from 1st of February 2016 and deadline for submission their mobile applications is 31st of March 2016.
Rules and Regulations for Participants:

  • Participants can be participate as a team or individual member.
  • A team must consist of maximum 5 members.
  • Evaluation criteria should be based on
    • Innovativeness and Creativeness
    • Completeness of work
    • Usability and Stability
    • Originality of work
  • Evaluation process is carried out by a 3 member panel who have expertise in the field of mobile application development after 31st March, 2016. (Exact date & venue will be notified later via email)
  • 10 minutes each will be given to demonstrate the developed application
  • Prizes & certificates will be issued to the best 3 mobile application of the competition

All the applications can be send to
Mr.K.Sarveswaran (Asst. General Secretary, JSA),
Lecturer,
Dept. of Computer Science,
University of Jaffna,
Thirunelvely or to the following email address  thejsaorg@gmail.com.

நேர அட்டவணை

போட்டி திகதி - நேரம் மதிப்பீட்டு நிலையம் பங்குபற்றும் வலயங்கள்
கண்காட்சி, சுவரொட்டி 11.02.2016, காலை 10.00 மாங்குளம் மத்திய மகாவித்தியாலயம் கிளிநொச்சி, முல்லைத்தீவு, துணுக்காய்
  11.02.2016, காலை 10.00 மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி மன்னார், மடு
  11.02.2016, காலை 10.00 சைவப் பிரகாச மகளிர் கல்லூரி, வவுனியா வவுனியா வடக்கு, வவுனியா தெற்கு
  12.02.2016, காலை 10.00 யாழ். இந்து மகளிர் கல்லூரி யாழ், தீவகம், வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி
பேச்சு 26.02.2016, காலை 10.00 விவசாய பீடம், கிளிநொச்சி கிளிநொச்சி, துணுக்காய், முல்லைத்தீவு
  26.02.2016, காலை பிரயோக விஞ்ஞான பீடம், வவுனியா வவுனியா வடக்கு, வவுனியா தெற்கு, மன்னார், மடு
  26.02.2016, காலை 10.00 கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் வடமராட்சி, தென்மராட்சி, யாழ், வலிகாமம், தீவகம்
வினாவிடை, கட்டுரைப் போட்டி 27.02.2016 காலை 9.00 மாங்குளம் மத்திய மகாவித்தியாலயம் கிளிநொச்சி, முல்லைத்தீவு, துணுக்காய்
  27.02.2016 காலை 9.00 மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி மன்னார், மடு
   27.02.2016 காலை 9.00  சைவப் பிரகாச மகளிர் கல்லூரி, வவுனியா  வவுனியா வடக்கு, வவுனியா தெற்கு
   27.02.2016 காலை 9.00  யாழ். இந்து மகளிர் கல்லூரி  யாழ், தீவகம், வடமராட்சி, தென்மராட்சி
   27.02.2016 காலை 9.00  மருதனார் மடம் இராமநாதன் கல்லூரி  வலிகாமம்
பாடசாலைத் தோட்டப் போட்டி  01.03.2016 – 15.03.2016  விண்ணப்பிக்கும் பாடசாலைகளில் இடம்பெறும்  அவ்வவ்பாடசாலைகில் இடம்பெறும்.

அனுசரணை