School Science Program

பாடசாலை மாணவர்களுக்கான விஞ்ஞானப் போட்டிகள் – 2023/2024

ஆண்டுதோறும் வடமாகாணப் பாடசாலை மாணவர்களுக்கு இடையில் யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கம் பல்வேறு விஞ்ஞானம் சார்ந்த போட்டி நிகழ்ச்சிகளை நடாத்தி வருகின்றது. அதன் தொடர்ச்சியாக இவ்வருடமும் பின்வரும் 7 வேறுபட்ட எண்ணக்கருக்களுடன் போட்டிகளை நடாத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது:
1. கண்காட்சிப் போட்டி (Exhibit competition)
2. சுவரொட்டி போட்டி (Poster competition)
3. விஞ்ஞானக் கட்டுரைப் போட்டி (Essay Competition)
4. பாடசாலைத் தோட்டப் போட்டி (School gardening competition)
5. வினாடி வினாப் போட்டி (Quiz competition)
6. புனைகதைப் போட்டி (Fiction story competition)
7. பேச்சுப் போட்டி (Oration competition)

இப்போட்டிகளுக்காக பாடசாலை மாணவர்கள் கீழ்வரும் மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்:
பிரிவு I – தரம் 6-8
பிரிவு II – தரம் 9-11
பிரிவு III – தரம் 12-13

ஒவ்வொரு போட்டிகளுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கத்தின் வருடாந்த அமர்வின் இறுதி நாள் நிகழ்வில் வழங்கப்படுவதுடன் பங்குபற்றும் மாணவர்கள் அனைவருக்கும் e-certificate வழங்கப்படும்.

விண்ணப்பங்கள் அனுப்பும் முறைகள்

I) இப்போட்டிகளில் பங்குபற்ற விரும்பும் பாடசாலைகள் தமது விபரங்களை கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் (Google form) பூரணப்படுத்தி அனுப்புதல் வேண்டும்.
https://docs.google.com/forms/d/120vu2qZWadGJtT7exfSuoXi89n6bcG5YByDIOxrVOm4/edit
அல்லது
II) உரிய விண்ணப்படிவங்களை நிரப்பி thejsaorg@gmail.com மின்னஞ்சல் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
அல்லது
III) உரிய விண்ணப்படிவங்களை நிரப்பி 0770725056 எண்ணுக்கு Viber மூலம் அனுப்பி வைக்கலாம்.

விண்ணப்ப முடிவுத்திகதி: 29/09/2023

போட்டிகள் தொடர்பான விபரங்கள்
School science competiton 2023 – Prospectus
போட்டிக்கான விண்ணப்ப படிவம்
Application form 2023-2024

தொடர்புகளுக்கு
கலாநிதி ரெ. சுவந்தினி (உதவிப் பொதுச் செயலாளர், யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கம் )
சிரேஷ்ட விரிவுரையாளர்
விவசாயபீடம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
மின்னஞ்சல்: thejsaorg@gmail.com
தொலைபேசி: 0770725056