School Science Program

School Science Program - 2015/2016

1991 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கம் வடமாகாணத்தில் விஞ்ஞான அறிவையும் திறன்களையும் விருத்தி செய்யும்விதமாகப் பல செயற்றிட்டங்களை முன்னெடுத்துவருவது நீங்கள் அறிந்ததே. அவ்வகையில் வருடாவருடம் பாடசாலைகளுக்கிடையிலும் பாடசாலை மாணவர்களுக்கிடையிலும் பல்வேறு வகையான போட்டிகள் நடாத்தப்பட்டு வருகின்றன.

இவ்வருடமும் அப்போட்டிகள் ஒழுங்கு செய்யப்பட்டிக்கின்றன. கடந்த வருடங்களில் பெரும்பாலான போட்டிகள் யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டே இடம்பெற்றன. இவ்வருடம், வடமாகாணத்தின் அனைத்து கல்வி வலயங்களையும் கருத்திற்கொண்டு போட்டிகள் யாழ்ப்பாணம், மாங்குளம், வவுனியா, மன்னார் எனப் பல இடங்களிலும் நடாத்தப்பட இருக்கின்றன.

கண்காட்சி, சுவரொட்டி, கட்டுரை, பேச்சு, வினாவிடை, பாடசாலைத் தோட்டம் ஆகிய போட்டிகள் இம்முறை நடாத்தப்படஇருக்கின்றன. இப்போட்டிகள் பற்றி விரிவான விபரங்கள், மதிப்பீட்டு முறைகள், நடாத்தப்பட இருக்கும் திகதிகள் உள்ளடங்கிய ஒரு விபரக்கோவை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இப்போட்டிகள் பற்றிய மேலதிக விபரங்களை www.thejsa.org என்ற இணையத்தளத்திலும் பார்வையிடலாம். அத்தோடு ஒவ்வொரு போட்டிக்குமுரிய பொறுப்பானவர்களுடன் மின்னஞ்சலூடாகத் தொடர்ப்பு கொள்ளலாம்.

இந்தமுறை கண்காட்சி மற்றும் சுவரொட்டிப் போட்டிகளில் சிறப்பாகச் செயற்படும் அனைத்து மாணவர்களது காட்சிப்பொருள்களும் சுவரொட்டிகளும் பெப்ரவரி 18,19,20இல் இடம்பெறும் மருத்துவ பீடத்தின் கண்காட்சியில் காட்சிப்படுத்த ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. அத்தோடு பேச்சு, கட்டுரைப் போட்டியில் வெற்றிபெறும் மாணவர்கள் யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கத்தின் வருடாந்த மாநாட்டில் அவற்றை ஏனையோருக்கு படைப்பதற்கு நேரம் ஒதுக்கப்படும். வினாடி வினாப் போட்டிகளை தொலைக்காட்சியில் நேரடியாகக் காட்டுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனவே இம்முறை இப்போட்டிகள் மாணவர்ளின் திறமைகளை வெளிக்கொணர உதவுவதுடன் அவர்களுக்கான ஒரு உந்துதலையும் வழங்கும் என்பதில் ஐயமில்லை. வலய மட்டத்தில் சிறப்பாகச் செயற்படும் மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்குவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆகவே குறிப்பிட்ட தினங்களில் உரிய ஆயத்தங்களுடன் மாணவர்களைப் போட்டிகளில் பங்குபற்ற வைப்பதற்கு ஆவனசெய்யுமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறோம். இத்துடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவங்களை நிரப்பி 31.01.2016 திகதிக்கு முன்னர் தவறாது அனுப்பி வையுங்கள். அத்தோடு மாணவர்கள் இப்போதே போட்டிக்குத் தயாராகத் தொடங்கலாம். விண்ணப்பிக்கும் அனைவருக்குமான போட்டி ஒழுங்குகள் குறித்த இடங்களில் செய்துதரப்படும்.

விஞ்ஞான வினாவிடைப்போட்டி
சுவரொட்டிக்கான போட்டி
கண்காட்சிப் போட்டி
பேச்சுப் போட்டி
கட்டுரைப் போட்டி
பாடசாலை தோட்டப்போட்டி
மாதிரி விண்ணப்ப படிவங்கள்
Mobile Application Development (Open Category)

 

நேர அட்டவணை

போட்டி திகதி - நேரம் மதிப்பீட்டு நிலையம் பங்குபற்றும் வலயங்கள்
கண்காட்சி, சுவரொட்டி 11.02.2016, காலை 10.00 மாங்குளம் மத்திய மகாவித்தியாலயம் கிளிநொச்சி, முல்லைத்தீவு, துணுக்காய்
  11.02.2016, காலை 10.00 மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி மன்னார், மடு
  11.02.2016, காலை 10.00 சைவப் பிரகாச மகளிர் கல்லூரி, வவுனியா வவுனியா வடக்கு, வவுனியா தெற்கு
  12.02.2016, காலை 10.00 யாழ். இந்து மகளிர் கல்லூரி யாழ், தீவகம், வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி
பேச்சு 26.02.2016, காலை 10.00 விவசாய பீடம், கிளிநொச்சி கிளிநொச்சி, துணுக்காய், முல்லைத்தீவு
  26.02.2016, காலை பிரயோக விஞ்ஞான பீடம், வவுனியா வவுனியா வடக்கு, வவுனியா தெற்கு, மன்னார், மடு
  26.02.2016, காலை 10.00 கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் வடமராட்சி, தென்மராட்சி, யாழ், வலிகாமம், தீவகம்
வினாவிடை, கட்டுரைப் போட்டி 27.02.2016 காலை 9.00 மாங்குளம் மத்திய மகாவித்தியாலயம் கிளிநொச்சி, முல்லைத்தீவு, துணுக்காய்
  27.02.2016 காலை 9.00 மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி மன்னார், மடு
   27.02.2016 காலை 9.00  சைவப் பிரகாச மகளிர் கல்லூரி, வவுனியா  வவுனியா வடக்கு, வவுனியா தெற்கு
   27.02.2016 காலை 9.00  யாழ். இந்து மகளிர் கல்லூரி  யாழ், தீவகம், வடமராட்சி, தென்மராட்சி
   27.02.2016 காலை 9.00  மருதனார் மடம் இராமநாதன் கல்லூரி  வலிகாமம்
பாடசாலைத் தோட்டப் போட்டி  01.03.2016 – 15.03.2016  விண்ணப்பிக்கும் பாடசாலைகளில் இடம்பெறும்  அவ்வவ்பாடசாலைகில் இடம்பெறும்.

அனுசரணை